இந்தியன் -2 ஒருவரின் கவனக் குறைவு 3 பேர் பலி; விபத்து நடந்தது எப்படி?

கமல் ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் வெளிவர காத்திருக்கும் படம் இந்தியன். இப்படத்தின் படப்பிடிப்பில் நேற்று கொடுரமான சம்பவம் நடந்தது.

பொதுவாக சினிமா படப்பிடிப்புகளில் செட் அமைக்கப்படும் போது அங்கு ஒளிக்காக தளத்தில் பிரமாண்ட லைட்கள் அமைக்கப்படும். இந்த லைட்களை தூக்கிப்பிடிக்க industrial crane என்ற கிரேன் உபயோகப்படுத்தப்படும்.

நேற்று நடந்த விபத்தின் போது, கிரேனை இயக்கியவர் அனுபவம் இல்லாத, புதியவர் என்று தெரிய வந்துள்ளது. அவர் கிரேனை நகர்த்தும் போது ஒரு பக்கம் எடை கூடி கிரேன், சமநிலை தவறி ஒரு பக்கமாக சாய்ந்து ஒட்டு மொத்தமாக கீழே இருந்தவர்கள் மீது விழுந்துள்ளது.

டன் கணக்கில் எடை கொண்ட கிரேன் விழுந்ததில் மூவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

இந்த விபத்தில் இறந்த மது மற்றும் ஸ்ரீ கிருஷ்ணா என்பவர்களின் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. மேலும் இந்த புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் போஸ்ட் செய்து தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர் ரசிகர்கள்.

Madhu - Indian-2 Production assistant
Madhu – Indian-2 Production assistant

மேலும் இதில் ஸ்ரீ கிருஷ்ணா என்பவர் கார்ட்டூனிஸ்ட் மதன் அவர்களின் மாப்பிள்ளை எனவும் தகவல் பரவி வருகிறது, ஆனால் அது அவர் இல்லை எனவும் கூறப்பட்டு வருகிறது.

Sri Krishna (Indian 2 Assistant Director)
Sri Krishna (Assistant Director)


Comments are closed.

https://newstamil.in/