சிஏஏ ஆதரவு பேரணி – பெண் கலெக்டர் முடியை பிடித்து இழுத்த பா.ஜ.,வினர் – வீடியோ
மத்திய பிரதேசத்தில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு ஆதரவாக பாஜகவினர் நடத்திய பேரணியின்போது, போராட்டக்காரர் ஒருவர் பெண் துணை ஆட்சியரின் முடியைப் பிடித்து இழுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய பிரதேசத்தின் ராஜ்கர் பகுதியில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவாக பா.ஜ.,வினர் நேற்று (ஜன.,19) ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்தை தடுப்பதற்காக ராஜ்கர் கலெக்டர் நிவேதா மற்றும் துணை கலெக்டர் பிரியா வர்மா ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்றனர்.
அப்போது போராட்டக்காரர்களை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தார் கலெக்டர். மேலும் பாஜகவைச் சேர்ந்த ஒருவரை கண்ணத்தில் அடித்தார். இதனால் ஆத்திரமடைந்த போராட்டக்காரர்கள் பிரியா வர்மாவை முற்றுகையிட்டனர்.
இதனால் கலெக்டரை பா.ஜ., தொண்டர்கள் சூழ்ந்து கொண்ட போது, கூட்டத்தில் ஒருவர் பிரியா வர்மாவை அடித்து, முடியை பிடித்து இழுத்து தள்ளிவிடப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் இதுகுறித்த வீடியோவும் வைரலாக பரவி வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக 150 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் போலீஸார் தெரிவித்தனர்.
பாதுகாப்பு கருதி அப்பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பிரியாவை அடித்ததாக 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.