பிரஷாந்தை இயக்கும் மோகன் ராஜா

கடந்த 2018 ஆம் வருடம் அக்டோபர் மாதம் பிரபல இந்தி நடிகர் ஆயுஷ்மான் குர்ரானா நடிப்பில் வெளிவந்த அந்தாதூன் திரைப்படம் உலக அளவில் கவனம் ஈர்த்தது தேசிய விருது பெற்றது. இதையடுத்து அந்த படத்தை இந்தியாவின் பிற மொழிகளில் ரீமேக் செய்ய மிகப்பெரிய போட்டி நிலவ, தமிழ் பதிப்பை தியாகராஜன் கைப்பற்றினார்.

தமிழில் பிரஷாந்த் நடிக்க ரீ-மேக் ஆகிறது. இவரின் தந்தை தியாகராஜன் தயாரிக்கிறார். இதற்கான அறிவிப்பு ஏறகனவே வெளியான நிலையில் இப்போது, படத்தை மோகன் ராஜா இயக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

மோகன் ராஜா தனது முதல் 5 படங்களை ரீமேக் படங்களாக எடுத்து அவற்றை ஹிட்டாக்கி தனது தம்பியை ஒரு ஸ்டார் நடிகராக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது

அதனால் இப்படத்தை இவர் இயக்கினால் சரியாக இருக்கும் என பிரஷாந்த், தியாகராஜன் கருதுகின்றனர். இதற்கான பேச்சுவார்த்தையில் மோகன் ராஜாவும் சம்மதம் சொல்லியிருப்பதாக தெரிகிறது. விரைவில் படப்பிடிப்பை துவங்க உள்ளனர்.


156 thoughts on “பிரஷாந்தை இயக்கும் மோகன் ராஜா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

https://newstamil.in/