வியாழக்கிழமை, அக்டோபர் 1, 2026
Latest

வெள்ளக்காடான சென்னை; கன மழை எச்சரிக்கை!

சென்னையில் அடுத்த 2 மணி நேரத்திற்கு இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

வடகிழக்கு பருவமழை தொடங்கியதையடுத்து, தமிழகத்தின் வட மாவட்டங்களில் மழை பெய்துவருகிறது. இந்நிலையில் சென்னையில் நள்ளிரவு முதல் தொடர்ந்து கனமழை பெய்துவருவ்தால், சாலைகள் வெள்ளக்காடால காட்சி அளிக்கின்றன. இதனால் போக்குவரத்து ஸ்தம்பித்துள்ளது.

நேற்று இரவு முதல் மழை பெய்து வரும் நிலையில், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், ராணிப்பேட்டை, திருநெல்வேலி, தென்காசி, விருநகர் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் கனமழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடகிழக்கு பருவமழை, வளிமண்டல சூழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் ஓரிரு இடங்களில் கனமழை தொடரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.