கமலுக்கு ‘டார்ச் லைட்’ இல்லை!

தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளார். ஞாயிற்றுக்கிழமை மதுரையில் நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் பங்கேற்று பேசிய அவர், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் நீட்சிதான் நான் என கூறினார்.

கமல்ஹாசனின் இந்த பேச்சுக்கு, அதிமுகவினர் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளனர். அதிமுக நிறுவனர் எம்ஜிஆரை ரஜினிகாந்த், கமல்ஹாசன், பாஜகவினர் சொந்தம் கொண்டாடுவது வேடிக்கையாக உள்ளதாக அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் வைகைச்செல்வன் கூறியுள்ளார்.

கமலின் பேச்சால், அதிமுகவின் வாக்கு வங்கி சிதறிவிடும் என தோன்றவில்லை எனவும், கட்சி சாராத ஏழை மக்கள் மத்தியில் அரசியல் தொடர்பாக ஒரு எதிர்பார்ப்பு இருந்து கொண்டே இருப்பதாகவும் மூத்த பத்திரிகையாளர் கோலாகல ஸ்ரீனிவாஸ் தெரிவித்துள்ளார்.

மேலும், சட்டசபை தேர்தலில் தமிழகத்தில் அனைத்து தொகுதிகளிலும் மக்கள் நீதி மையம் கட்சிக்கு ‛டார்ச் லைட்’ சின்னம் ஒதுக்கப்படாததற்கு அக்கட்சி தலைவர் கமல் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மக்கள் நீதி மையம் கோரிய டார்ச் லைட் சின்னமானது, எம்.ஜி.ஆர். மக்கள் கட்சி என்ற கட்சிக்கு பொது சின்னமாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தோ்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதற்கு கமல்ஹாசன் கண்டனம் தெரிவித்துள்ளார். சாதாரண ரூபத்தை விஸ்வரூபம் எடுக்க வைக்கிறார்கள் என தனது அதிருப்தியை கமல் தெரிவித்துள்ளார்.



Comments are closed.

https://newstamil.in/