கருப்பர் கூட்டம் 500க்கும் மேற்பட்ட வீடியோக்கள் நீக்கம்

கருப்பர் கூட்டம் யூடியூப் சேனலை முடக்கம் செய்யுமாறு யூடியூப் நிர்வாகத்திற்கு தமிழக காவல்துறை கடிதம் எழுதி இருக்கிறது.

கருப்பர் கூட்டம் யூ ட்யூப் சேனலில் இந்து மத கடவுள்களையும், புராணங்களையும் இழிவு படுத்தும் வகையில் ஆபாசமாக பேசி வீடியோக்கள் வெளியிட்டதாக புகார் அளிக்கப்பட்டது.

பாஜகவினர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் அளித்த புகாரின் அடிப்படையில், சென்னை மத்திய குற்றப்பிரிவில் உள்ள சைபர் க்ரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து செந்தில் வாசன் மற்றும் சுரேந்திரன் என்ற இரண்டு நிர்வாகிகளை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

இந்நிலையில், கருப்பர் கூட்டம் சேனலில் உள்ள 500க்கும் மேற்பட்ட வீடியோக்களை சைபர் கிரைம் போலீசார் நீக்கியுள்ளனர். சர்ச்சைக்குரிய வீடியோக்கள் இருந்ததால், அந்த வீடியோக்கள் நீக்கப்பட்டுள்ளன.


254 thoughts on “கருப்பர் கூட்டம் 500க்கும் மேற்பட்ட வீடியோக்கள் நீக்கம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

https://newstamil.in/