தளபதி 65 குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு

தளபதி விஜய்யின் 65வது படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. நடிகர் விஜய் நடிக்கவிருக்கும் 65-வது படம் குறித்த மெகா அப்டேட்டை சன்பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

தளபதி 65 படத்தை இயக்கப் போவது யார் என்கிற கேள்வி கடந்த சில மாதங்களாகவே வைரலாகி வருகின்றன. வெற்றிமாறன், சுதா கொங்கரா, ஏ.ஆர். முருகதாஸ், ஷங்கர், பேரரசு, பாண்டிராஜ், அட்லி, லோகேஷ் கனகராஜ் என ஏகப்பட்ட பெயர்கள் அடிபட்டு வந்த நிலையில், தற்போது இயக்குநர் நெல்சன் கன்ஃபார்ம் ஆகி உள்ளார்.

பிரபல தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் நிறுவனம், இயக்குனர் சிவா இயக்கத்தில், நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் அண்ணாத்த படத்தை தயாரித்து வருகிறது. விஜய்யின் அடுத்த படமான தளபதி 65 படத்தையும் இந்நிறுவனமே தயாரிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கான பேச்சு வார்த்தைகள் நடைபெற்று வந்த நிலையில் இன்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. விஜய் நடிப்பில் உருவாகி வந்த மாஸ்டர் திரைப்படத்தின் பணிகளும் முழுமையாக முடிந்து, அப்படம் ரிலீசுக்கு தயாராகி வருவதால் விஜய்யின் அடுத்த படம் குறித்து பெரும் எதிர்பார்ப்பு உள்ளது.Comments are closed.

https://newstamil.in/