100 பிரபலமானவர்கள் பட்டியலில் அஜித், விஜய் – முன்னிலையில் யார்?

போர்ப்ஸ் வெளியிட்ட இந்தியாவின் செல்வாக்குமிக்க 100 பிரபலமானவர்கள் பட்டியலில் நடிகர்கள் ரஜினி, கமல்ஹாசன், அஜித், விஜய் ஆகியோர் இடம்பிடித்துள்ளனர்

வருடா வருடம் போர்ப்ஸ் பத்திரிக்கை சிறந்த 100 பிரபலங்களுக்கான பட்டியலை வெளியிடுவார்கள். இதில் சினிமா பிரபலங்களை தாண்டி பல தொழில்களில் பிரபலமாக இருப்பவர்களின் பெயர்களும் வரும்.

டாப் 100 பட்டியலில் தமிழக பிரபலங்கள்:

ரஜினிகாந்த் – 13வதுஇடம் (ரூ.100 கோடி ஆண்டு வருமானம்)

ஏ.ஆர்.ரகுமான் – 16வதுஇடம் (ரூ.94.8 கோடி ஆண்டு வருமானம்)

விஜய் – 47வதுஇடம் (ரூ.30 கோடி ஆண்டு வருமானம்)

அஜித்குமார் – 52வதுஇடம் (ரூ.40.5 கோடி ஆண்டு வருமானம்)

இயக்குநர் சங்கர் – 55வது இடம் (ரூ.31.5 கோடி ஆண்டு வருமானம்)

கமல்ஹாசன் – 56வது இடம் (ரூ.34 கோடி ஆண்டு வருமானம்)

தனுஷ் – 64வது இடம் (ரூ.31.75 கோடி ஆண்டு வருமானம்)

சிறுத்தை சிவா – 80வது இடம் (ரூ.12.17 கோடி ஆண்டு வருமானம்)

கார்த்திக் சுப்பராஜ் – 84வது இடம் (ரூ.13.5 கோடி ஆண்டு வருமானம்)

இந்த பட்டியலில் முதலிடத்தில் கிரிக்கெட் வீரர் விராட் கோலி உள்ளார். இவர் 2019ம் ஆண்டில் 252 கோடி வருவாய் ஈட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டாவது இடத்தில் அக்‌ஷய் குமாரும், மூன்றாவது இடத்தில் சல்மான் கானும் உள்ளனர்.

இந்த 100 பிரபலங்கள் பட்டியலில் தமிழ் சினிமாவின் விஜய் 47வது இடத்தையும், தல அஜித் 52வது இடத்தை பிடித்துள்ளார்.Comments are closed.

https://newstamil.in/