Thursday, September 10, 2026
ENTERTAINMENTLatest

பொன்னியின் செல்வன் – வைரமுத்துவை நீக்கிய மணிரத்னம்!

ரோஜா படம் முதல் மணிரத்னம் இயக்கும் படங்களில் எல்லாம் பாடல்களை எழுதுவது வைரமுத்துதான். இந்த கூட்டணி 27 ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் இருந்து வந்தது.

மணிரத்னம் இயக்கத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம் பிரபு, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ஐஸ்வர்ய லட்சுமி, பிரபு மற்றும் பலர் நடிக்கும் படம் ‘பொன்னியின் செல்வன்’.

இந்த படத்தில் பணிபுரியும் நடிகர், நடிகைகள் மற்றும் தொழில் நுட்ப வல்லுனர்கள் விவரம் வெளியாகியுள்ள நிலையில் அதில் வைரமுத்து பெயர் இல்லை. இதனால் 27 வருடங்களாக இணைந்து பணியாற்றிய இந்த கூட்டணி உடைந்துள்ளதா என சந்தேகம் எழுந்துள்ளது.

ஆனால் இப்போது அது உறுதியாகி உள்ளது. வைரமுத்துவிற்குப் பதிலாக வேறு சில பாடலாசிரியர்களை வைத்து பாடல்களை எழுத உள்ளார்களாம். இப்போது, கபிலன் எழுதிய இரண்டு பாடல்களை ரகுமான் பதிவாக்கியுள்ளதாகச் சொல்கிறார்கள். முதல் கட்டப் படப்பிடிப்பு முடிவடைந்த பின் மற்ற பாடல்களை முடிக்க உள்ளார்களாம்.



Comments are closed.