விஜய் 64 படப்பிடிப்பில் நடிகைகள் செய்த அட்டகாசம்

தீபாவளி ட்ரீட்டாக திரைக்கு வந்த விஜய்யின் பிகில் திரைப்படம் வசூலில் பல சாதனைகளை செய்து வருகிறது. இதையடுத்து கைதி புகழ் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி 64 படத்தில் நடித்து வருகிறார். அதில் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனும், வில்லனாக விஜய் சேதுபதியும் நடித்துள்ளனர்.

விஜய்யின் 64வது படத்தின் படப்பிடிப்பு கர்நாடகாவில் கடந்த சில நாட்களாக நடந்து வந்தது. கிறிஸ்துமஸ் விழா முன்னிட்டு படக்குழு சென்னை வந்ததாக செய்திகள் வருகின்றன. அடுத்தக்கட்ட படப்பிடிப்பு எப்போது, எங்கு தொடங்குகிறது என்பது இன்னும் தெளிவாக தெரியவில்லை.

இந்த படத்தில் ஆண்ட்ரியா, ஸ்ரீமன், ’96’ புகழ் கவுரி கிஷான், ‘பவி டீச்சர்’ பிரிகிடா, வி.ஜே.ரம்யா, சாந்தனு, மலையாள நடிகர் ஆண்டனி வர்கீஸ், சேத்தன், சஞ்சீவ், பிரேம் என நட்சத்திர பட்டாளங்களின் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது.

இந்த படத்தில் நடிப்பவர்கள் சிலரை பற்றி நாம் ஏற்கெனவே அறிந்திருந்தோம், தற்போது மலையாள நடிகையான லிண்டு ரோனி தளபதி 64 படப்பிடிப்பு தளத்தில் அங்கிருந்த நடிகர்களுடன் இணைந்து டிக் டாக் செய்துள்ளார் அந்த டிக்டாக் வீடியோ இப்போது வைரலாகி வருகிறது.



Comments are closed.

https://newstamil.in/