ரஜினிகாந்த் 50 லட்சம், சிவாகார்த்திகேயன் 10 லட்சம் நிதியுதவி!
கொரோனாவால் உலக மக்கள் அனைவரும் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், இந்தியாவில் உள்ள அனைத்து துறைக்களும் இதனால் பாதிக்கப்பட்டுள்ளன.
சினிமா தொழிலாளர்களுக்கு உதவ ஃபெப்சி அமைப்புக்கு ரூ.50 லட்சம் நிதியுதவி அளித்துள்ளார் நடிகர் ரஜினிகாந்த். கொரோனா காரணமாக சினிமா படப்பிடிப்புகள் ரத்தாகி தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளதால் இந்த உதவியை ரஜினி செய்துள்ளார். தொழிலாளர்களை காக்க நிதியுதவி அளிக்க வேண்டும் என்று இயக்குநர் ஆர்.கே.செல்வமணி வேண்டுகோள் விடுத்திருந்தார்.
இதனையடுத்து நடிகர்கள் சூர்யா,கார்த்தி மற்றும் சிவக்குமார் ஆகியோர், 10 லட்சத்தை அளித்திருந்தனர்.
அந்த வரிசையில் தற்போது நடிகர் சிவாகார்த்திகேயன் FEFSI நிறுவனத்திற்கு 10 லட்சம் தந்துள்ளார்.
Comments are closed.