ஜியோவின் 9.99% பங்குகளை வாங்கியது ஃபேஸ்புக்

இந்தியாவின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனங்களில் ஒன்றான ரிலையன்ஸ் ஜியோவின் 9.99% பங்குகளை, 43,574 கோடிகளுக்கு சமூக வலைதள பெருநிறுவனமான ஃபேஸ்புக் வாங்கியுள்ளது. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனத்தின் ஒரு பகுதியான ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ் லிமிடெட்டில் 5.7 பில்லியன் டாலர் (45,574 கோடி) முதலீடு செய்வதாக பேஸ்புக் அறிவித்துள்ளது.

ஃபேஸ்புக் உடனான இந்த பங்கீட்டைக் குறித்து நிலையன்ஸ் குழுமத் தலைவர் முகேஷ் அம்பானி பேசுகையில், “2016-இல் ரிலையன்ஸ் ஜியோவைத் தொடங்கியபோது, இந்திய டிஜிட்டல் சர்வோதயாவைக் கொண்டுவரும் கனவுடன் அதைத் தொடங்கினோம்.

ஒவ்வொரு இந்தியரின் வாழ்க்கைத் தரத்துடன், இந்தியாவின் டிஜிட்டல் திறனும் சேர்ந்தே வளரும்போது, இந்தியா சர்வதேச நாடுகளின் முன்னால் டிஜிட்டல் வளர்ச்சியும் பெற்ற நாடாக மிளிரும் என்பதே கனவாக இருந்தது. இந்தியர்கள் அனைவருக்குமான பயனாகவும், டிஜிட்டல் துறையில் வேகம்பெற்று வளர்வதற்கு ரிலையன்ஸைச் சேர்ந்த நாங்கள் அனைவரும் ஃபேஸ்புக்கை, நீண்ட கால பங்குதாரராக வரவேற்பதில் பெருமை கொள்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் தற்போது கட்டண சேவையில் ஈடுபட்டு வரும் கூகுள் பே மற்றும் பேடிஎம் நிறுவனங்களுக்குப் போட்டியாக வாட்ஸட் அப்ஐ உருவாக்குவதற்கு பேஸ் புக் நிறுவனம் முற்சிக்கின்றது. வாட்ஸ் அப் கட்டண சேவைக்கான அனுமதியை இந்தியாவில் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தனது ஃபேஸ்புக் பக்கத்தில் இதுகுறித்து தெரிவித்துள்ள ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூகர்பெர்க், “இந்த முயற்சி, வளர்ந்து வரும் டிஜிட்டல் பொருளாதாரத்தில் மக்களுக்கும், வணிகங்களுக்கும் புது வழிகளைத் திறக்கும். உதாரணமாக, ஜியோவின் சிறு முன்னெடுப்பான ஜியோ மார்ட், வாட்ஸ்-அப்பின் திறனுடன் சேரும்போது, வணிகத்துடனான தொடர்போ, பொருட்களை வாங்குவதோ சிரமமற்ற ஒரு மொபைல் அனுபவமாக இருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.ஜியோ தொலைதொடர்பு தளங்கள், ரிலையன்ஸ் சில்லறை வர்த்தகம் மற்றும் வாட்ஸ்-அப் ஆகியவை, இந்திய வாடிக்கையாளர்கள் பலரின் தேவையை நிறைவேற்ற சிறு வர்த்தகர்களைத் தயார்படுத்தி, அவர்களுக்கும் பலனளிக்கிறது. இந்த சிறு வணிகர்களின் மூலமாக, தங்கள் இருப்பிடங்களுக்கு அருகிலேயே தயாரிப்புகளையும், சேவைகளையும் ஜியோ வாடிக்கையாளர்களால் வாட்ஸ்-அப் மூலமாக பெறமுடிகிறதா என்பதை நிறுவனங்கள் மிகக்கவனமாக மேற்பார்வையிடும்” என்று தெரிவித்திருக்கிறது ரிலையன்ஸ் ஜியோ.



Comments are closed.

https://newstamil.in/