நயன்தாரா – விக்னேஷ் காதலர் தின வைரல் புகைப்படங்கள்

நயன்தாரா – விக்னேஷ் சிவன் ஜோடி காதலர் தினத்தில் எடுத்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக சுற்றி வருகின்றன.

விக்னேஷ் சிவன் இயக்கிய ‘நானும் ரெளடிதான்’ படத்தில் நடித்தபோது அவருடன் நயன்தாராவுக்கு காதல் மலர்ந்தது. அந்த வகையில் கடந்த ஐந்து ஆண்டுகளாக காதலர்களாக உலா வருகின்றனர்.

முரட்டு சிங்கிளான 90ஸ் கிட்ஸ் இவங்க பண்ற ரொமான்ஸ் பாத்து வயிறு எரிஞ்சிப்பாங்க. அப்படித்தான் ஒவ்வொரு முறை புகைப்படங்கள் வெளியிடும்போதும் இணையத்துல இவங்க ரொமாண்டிக் புகைப்படங்கள் வைரலாகும்.

இந்தாண்டும், இருவரும் காதலர் தினத்தை கொண்டாடி மகிழ்ந்துள்ளனர். அந்த புகைப்படங்களை இருவரும் சமூகவலைதள பக்கத்தில் பதிவிட்டனர். நயன்தாரா, “இது விக்கி-நயன் குட்டி லவ் ஸ்டோரி என பதிவிட்டார்.

இந்த போட்டோக்களை பார்த்த ரசிகர்கள், இந்தாண்டாவது இருவரும் திருமணம் செய்து கொள்வீர்கள் என சமூகவலைதளங்களில் கேள்வி எழுப்பி உள்ளனர். சிங்கிள் பசங்கேளா, ஏண்டா இப்படி நீங்க வேற வெறுப்பேத்துறீங்க என்கிற ரீதியில் தங்களது ஆதங்கத்தை கருத்துக்களாக பதிவிட்டுள்ளனர்.


6 thoughts on “நயன்தாரா – விக்னேஷ் காதலர் தின வைரல் புகைப்படங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

https://newstamil.in/