‘வாத்தீகமிங்’ மாஸ்டர் இரண்டாவது சிங்கிள்
தளபதி விஜய் நடிப்பில் மாஸ்டர் ஏப்ரல் மாதம் திரைக்கு வரவுள்ள உள்ளது. சென்னை நட்சத்திர ஹோட்டலில் வரும் 15-ம் தேதி மாஸ்டர் பட இசைவெளியீட்டு விழா நடைபெறுகிறது.
ரசிகர்கள் இல்லாமல் நடைபெறும் இந்த விழாவை நேரலையாக ஒளிபரப்புகிறது சன் டிவி. அதற்கான பிரத்யேக ட்ரெய்லரையும் சன் டிவி வெளியிட்டுள்ளது.
இப்படத்தின் மீது ரசிகர்களுக்கு மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பு இருந்து வருகின்றது. ஏனெனில் விஜய் முதன் முறையாக சென்சேஷன் இயக்குனர் லோகேஷுடன் கைக்கோர்த்துள்ளது ஒரு காரணம் என்பதால்.
இந்நிலையில் இத்திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள இரண்டாவது சிங்கிள் ட்ராக் பாடல் நாளை மாலை 5 மணிக்கு வெளியாகும் என்று படக்குழு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மாஸ்டர் படத்தின் ஏற்கனவே வெளிவந்து பட்டித்தொட்டியெல்லாம் பட்டையை கிளப்பி வருகின்றது. மேலும், இப்பாடல் ‘வாத்தீகமிங்’ என்று தொடங்கும் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
Comments are closed.