முதல் நாள் காதலர் தினம்; அடுத்த நாள் சபரிமலை – விக்னேஷ் சிவன் அட்டகாசம்!
சிகர்களால் லேடி சூப்பர் ஸ்டார் என்று கொண்டாடப்படும் நயன்தாரா இயக்குநர் விக்னேஷ் சிவனை உருகி உருகி காதலித்து வருகிறார். அடிக்கடி வெளிநாடுகளுக்கு விசிட் அடிக்கும் இந்த ஜோடி, அங்கு எடுக்கப்படும் புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு வருகின்றனர்.
இவர்கள் இருவரும் சேர்ந்து செய்யும் அளப்பறைகளை பார்க்கும் சமூக வலைதளவாசிகள் சிங்கிள் பசங்க சாபம் உங்களை சும்மா விடாது என கடுப்பாகின்றனர்.
இந்த ஜோடி பிப்ரவரி 14 ரொமன்ஸ்சா காதலர் தினம் கொண்டாடி அந்த புகைப்படத்தை இணையத்தில் வைரல் ஆகியது, அடுத்த நாளே விக்னேஷ் சிவன் சபரிமலையில் மாலை போட்டுக்கொண்டு தரிசனம் செய்கிறார்.
அது எப்படி பாஸ் அடுத்த அடுத்த நாள் உங்களால மட்டும் எப்படி இப்படி மாற முடியாது என்று நெட்டிசன்கள் கமெண்ட் பண்ணிட்டு வராங்க.

இவர் இயக்கம் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்திற்காக சபரிமலை சென்று தரிசனம் செய்து இருப்பதாக இன்ஸ்டாகிராமில் தெரிவித்துள்ளார்.
அந்த அளவிற்கு லூட்டியடிக்கும் இந்த ஜோடி புறாக்கள் திருமணத்தை பற்றி மூச்சு விடாமல் கமுக்கமாக இருக்கிறார்கள். ஆனால் ஊர்சுற்றும் நெருக்கமான புகைப்படங்கள் மட்டும் அவ்வப்போது வெளியாகி பலரையும் புகைய வைத்துவிடுகிறது.

Comments are closed.