அமலா பால் பொய் புகார்? அத்துமீறிய நபர் குற்றச்சாட்டு! நீதிமன்றம் விதித்த அதிரடி உத்தரவு
கொட்டிவாக்கத்தை சேர்ந்த தொழிலதிபர் அழகேசன் மீது நடிகை அமலாபால் தொடர்ந்த வழக்கில் விசாரணை நடத்த சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
அழகேசன் ஆபாசமாக பேசியதாக கடந்த ஆண்டும் சென்னை மாம்பலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார், மேலும் தனியார் நிறுவன ஊழியரான பல்லாவரத்தை சேர்ந்த பாஸ்கர் என்பவருக்கும் இந்த வழக்கில் தொடர்பிருப்பதாக தெரியவந்தது.
அதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் தொழிலதிபர் அழகேசன், பல்லாவரத்தைச் சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் பாஸ்கர் ஆகியோரை கைது செய்தனர். தற்போது இருவரும் கைது செய்யப்பட்டு பின் ஜாமினில் வந்தனர்.
இந்நிலையில் அமலா பால் பொய் புகார் அளித்துள்ளார் என்றும் வழக்கை ரத்து செய்யக் கோரியும், விசாரணைக்கு தடை விதிக்கக் கோரியும் குற்றம்சாட்டப்பட்ட பாஸ்கர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.
இதனை விசாரித்த நீதிபதிகள் அந்த வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதித்ததோடு, மனுவுக்கு காவல் துறை பதிலளிக்கவும் உத்தரவிட்டுள்ளார்.
Comments are closed.