நடிகை ஷீலா திருமணம்: தொழில் அதிபரை மணந்தார்

SHARE THIS
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

பூவே உனக்காக, கோல்மால், மாயா, நந்தா உள்ளிட்ட பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த ஷீலா, அதன் பிறகு இளவட்டம், வீராசாமி, சீனா தானா, கண்ணா, வேதா உள்பட பல படங்களில் ஹீரோயினாக நடித்தார். இவர் தமிழ் தெலுங்கு மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளில் நடித்துள்ளார்.

தளபதி விஜய்யின் பூவே உனக்காக, அஜித்தின் தீனா போன்ற முன்னணி நட்சத்திரங்களில் படங்களில் கூட நடித்துள்ளார். கடந்த 2 வருடங்களாக சினிமா வாய்ப்பு இன்றி இருந்தவர், இப்போது திருமணம் செய்து கொண்டிருக்கிறார்.

இவருக்கு தற்போது திரு சந்தோஷ் என்பவருடன் திருமணம் முடிந்துள்ளது. தற்போது தனது திருமண போட்டோக்களை டுவிட்ரில் வெளியிட்டுள்ள ஷீலா “எனக்கு இந்த நாள் சிறப்பான நாள். எதனுடனும் ஒப்பிட முடியாத மகிழ்ச்சியை என் இதயம் உணர்கிறது. புதிய நாளில் புதிய வாழ்க்கையை தொடங்கியிருக்கிறேன்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.


Tag: , , , , , , ,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *