சவுக்கு சங்கருக்கு 6 மாதம் சிறை – நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னையை சேர்ந்த யூடியூபர் சவுக்கு சங்கர். இவர் ட்விட்டரில், ‘நீதித் துறை ஊழல் கறை படிந்திருக்கிறது’ என கருத்து பதிவு செய்தார். இதற்காக அவர் மீது உயர் நீதிமன்ற மதுரை கிளை தாமாக முன்வந்து குற்றவியல் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கை நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், பி.புகழேந்தி ஆகியோர் விசாரித்தனர்.

பின்னர் தீர்ப்பு குறித்த விசாரணை வந்தபோது நீதிபதிகள், ” சவுக்கு சங்கரை 6 மாதம் சிறையில் அடைக்க உத்தரவிட்டனர். மேலும், இந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கிற்கு காரணமான பதிவுகளை சமூக வலைதளங்களிலிருந்து நீக்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு மத்திய தொழில்நுட்பத்துறைக்கு உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கு குறித்து முகநூல், கூகுள், ட்விட்டர் சமூக வலைதளங்கள் பதிலளிக்கவும் உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.

மேலும், சவுக்கு சங்கர் இந்த தண்டனையை நிறுத்தி வைக்கக் கோரிக்கை வைத்தார். ஆனால், நீதிபதிகள் அதை நிராகரித்தனர்.


2,790 thoughts on “சவுக்கு சங்கருக்கு 6 மாதம் சிறை – நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் உயர் நீதிமன்றம் உத்தரவு