முதல்வர் பதவிக்கு விஜய்க்கு அழைப்பு விடுத்தார் ஆளுநர்! சி.ஜோசப் விஜய் என்னும் நான்!!

சென்னை: சென்னை கிண்டியில் உள்ள மக்கள் மாளிகையில் தமிழ்நாடு பொறுப்பு ஆளுநர் அர்லேகரை, தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் இன்று தொடர்ந்து இரண்டாவது நாளாக சந்தித்து பேசியது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சந்திப்பு சாதாரண மரியாதை நிமித்தமானதல்ல என்றும், ஆளுநரின் நேரடி அழைப்பின் பேரிலேயே விஜய் மக்கள் மாளிகைக்கு சென்றதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக, ஆட்சி அமைப்பது தொடர்பாக சில முக்கிய விளக்கங்களை ஆளுநர் கேட்டதாக கூறப்படுகிறது.

மேலும், தற்போதைய அரசியல் சூழல் மற்றும் பெரும்பான்மை ஆதரவு குறித்து ஆளுநர் விஜய்யிடம் சில கேள்விகளை எழுப்பியதாகவும், அதற்கு விஜய் தெளிவான மற்றும் திருப்திகரமான பதில்களை அளித்ததாகவும் அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. இதையடுத்து, விஜய்க்கு ஆட்சியமைக்க அழைப்பு விடுக்கப்பட்டதாக தகவல்கள் பரவி வருகின்றன.

மட்டுமல்லாது, ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் இன்று கேரளாவுக்குச் செல்லத் திட்டமிட்டுள்ளதால், அவர் கிளம்புவதற்குள் இறுதிப் பட்டியலை அளித்து, அழைப்புக்கான உத்தரவைப் பெற விஜய் முயற்சிக்கலாம் என்றும் சொல்லப்பட்டிருந்தது. மே 8 அல்லது 9-ஆம் தேதிகளில் பதவியேற்கத் திட்டமிடப்பட்டுள்ளதால், அதற்கான அதிகாரப்பூர்வ அனுமதியை இன்று பெறுவதே இந்தச் சந்திப்பின் முக்கிய நோக்கமாக இருக்கலாம் என்றும் பலரும் கூறியிருந்தனர்.



Sudhakar

சுதாகர் - தமிழ் செய்தித்தளம் Newstamil.in இணையதளத்தில் திறமையான எழுத்தாளர் மற்றும் எடிட்டர். தமிழ் வாசகர்களுக்காக அரசியல் (Politics), உலகச் செய்திகள் (World), தமிழ்நாடு (Tamil Nadu), தேசிய செய்திகள், நீதிமன்றம் (Court), டெக்னாலஜி, ஆட்டோமொபைல், நடப்பு நிகழ்வுகள் மற்றும் விளையாட்டு போன்ற பிரிவுகளில் ஆழ்ந்த, துல்லியமான மற்றும் விரைவான செய்திகளை எழுதும் திறன் கொண்டவர். கிரிக்கெட் தொடர்பான செய்திகளை சுவாரஸ்யமாகவும், வாசகர்களை ஈர்க்கும் விதமாகவும் வழங்கும் திறமை அவரின் முக்கியமான பலமாகும். தகவல்களை எளிதில் புரியும் வகையில், நேர்மையான அணுகுமுறையுடன் வழங்குவதால் Newstamil.in வாசகர்களிடையே நம்பகமான எழுத்தாளராக திகழ்கிறார்.

https://newstamil.in/