காரில் மதுபாட்டில் கடத்தினாரா ரம்யா கிருஷ்ணன்? – டிரைவர் கைது
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களுடன் நடித்து பிரபலமானவர் ரம்யா கிருஷ்ணன். பாகுபலி திரைப்படத்தில் சிவகாமி கதா பாத்திரத்தில் நடித்து மீண்டும் திரை உலகிற்கு மாஸ் என்ட்ரி கொடுத்தார்
இந்நிலையில், கொரோனா அச்சுறுத்தலால் சென்னையில் மதுபானக் கடைகள் திறக்க தடை விதிக்கப்படுள்ளது. சென்னையைத் தவிர்த்து பிற பகுதிகளில் மதுபானக் கடைகள் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
சிலர் சென்னையைத் தாண்டிச் சென்று மதுபாட்டில்கள் வாங்கி வருவதைத் தடுக்க சோதனைச் சாவடிகளில் வாகன சோதனையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் கிழக்கு கடற்கரைச்சாலையில் முட்டுக்காட்டில் உள்ள சோதனைச் சாவடியில் வியாழக்கிழமை இரவு வாகனசோதனை செய்துக் கொண்டிருந்த கானத்தூர் போலீஸார், அங்கு வந்த இன்னோவா காரை மறித்து, அதில் இருந்தவர்களிடம் சோதனையிட வேண்டும் என தெரிவித்தனர்.
அப்போது அந்த காரில் இருந்த நடிகை ரம்யா கிருஷ்ணன், அவரது சகோதரி வினயா கிருஷ்ணன் ஆகியோர் சோதனையிடுவதற்கு சம்மதம் தெரிவித்துள்ளனர்.
அப்போது காரில் பதுக்கிவைக்கப்பட்டிருந்த 100க்கும் மேற்பட்ட மதுபாட்டில்களை கண்டு அதிர்ச்சியாகினர்.. அதில் 96 பீர் பாட்டில்களும், 3 பிளாக் லேபிள், 3 பிளாக் லேபிள் ரெட் மது பாட்டில்களும் இருந்துள்ளன.
உடனே போலீஸார், இது தொடர்பாக அந்த காரை ஓட்டி வந்த சென்னை அபிராமபுரத்தைச் சேர்ந்த செல்வகுமார் என்பவரை கைது செய்து, வழக்குப் பதிவு செய்தனர்.
சிறிது நேரத்தில் கார் ஓட்டுநர் செல்வகுமாரை நடிகை ரம்யாகிருஷ்ணனும் அவரது சகோதரி வினயாகிருஷ்ணனும் ஜாமீனில் அழைத்துச் சென்றனர்.
Comments are closed.