லதாவை காதலித்ததால் ரஜினியை அடித்தாரா எம்ஜிஆர்?
ரஜினி அரசியலில் விரைவில் குதிக்கவிருப்பதால் அவருக்கு எதிரான செய்திகளை பரப்புவதில் அரசியல்வாதிகள் மிக தீவிரமாக உள்ளனர். அவற்றில் ஒன்றுதான் ரஜினியை எம்ஜிஆர் அடித்தார் என்று கூறுவதூ.
நீண்ட காலமாக ரஜினிகாந்தை பற்றி சில வதந்திகள் செய்திகள் எல்லோராலும் பேசப்பட்டு வருகிறது, அவர் போதைக்கு அடிமையாகி இருந்தார், 1979 ஆம் ஆண்டு லதாவை காதலிக்கும் போது ரஜினியை ராமாவரம் தோட்டத்திற்கு அழைத்து எம்.ஜி.ஆர் அடித்ததாக நிறைய வதந்திகள் வந்து கொண்டு இருக்கிறது
இது இப்போது சமூக வலைதளங்களில் அண்மை காலமாக பரப்பப்படும் தகவலுக்கு எம்.ஜி.ஆரின் மெய்க்காப்பாளர் கே.பி.ராமகிருஷ்ணன் மறுப்பு தெரிவித்துள்ளார்.
மறைந்த தமிழக முதல்வர் எம்.ஜி.ஆரிடம் 40 ஆண்டுகளுக்கும் மேலாக திரையுலகம் தொடங்கி அரசியல் களம் வரை மெய்க்காப்பாளராக இருந்தவர் சண்டைக் கலைஞரான கே.பி.ராமகிருஷ்ணன்.
பல படங்களில் எம்.ஜி.ஆருக்கு டூப் போட்டு சண்டை போட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது, ஒரு போதும் எம்.ஜி.ஆர், ரஜினியை அடிக்கவில்லை. ஆனால் அதே நேரத்தில் கோவையில் நடந்த கட்சிக் கூட்டத்தில் நெருக்கடியைப் பயன்படுத்தி பெண் தொண்டரிடம் சில்மிஷம் செய்த நபர் ஒருவரை எம்.ஜி.ஆர் அடித்தார்’ என்று கூறியுள்ளார்.
எம்.ஜி.ஆரி ரஜினிக்கு அறிவுரை கூறியதாக கூறினார் “ரஜினிகாந்த் நல்ல நடிங்க, நல்ல பொண்ண கல்யாணம் பண்ணுங்க, படத்துல எப்படி நடிக்கணும் என்று அறிவுரை கூறுவதாக தெரிவித்தார்.
Comments are closed.