உன்னாவ் பலாத்கார வழக்கு – பாஜக முன்னாள் எம்.எல்.ஏ.வுக்கு ஆயுள் தண்டனை
உன்னாவ் சிறுமி பலாத்கார வழக்கில் பா.ஜ.,விலிருந்து நீக்கப்பட்ட எம்.எல்.ஏ., குல்தீப் சென்காருக்கு ஆயுள் தண்டனையும், ரூ.25 லட்சம் அபராதம் விதித்தும் டில்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பாஜக சார்பில் உத்திரப்பிரதேசத்தின் உன்னாவ் தொகுதியில் நான்கு முறை எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் குல்தீப் சிங் செங்கார். கடந்த 3 மாதங்களுக்கு முன்பு பாஜகவில் இருந்து இவர் நீக்கப்பட்டார்.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் உன்னோவ் பகுதியை சேர்ந்த 17 வயதான பெண் ஒருவர் கடந்த 2017 ஆம் ஆண்டு, தனது வேலை குறித்து கேட்க எம்.எல்.ஏ குல்தீப் செங்கர் வீட்டிற்கு சென்றபோது அவரை எம்.எல்.ஏ குல்தீப் பாலியல் கொடுமை செய்ததாக அப்பெண் கடந்த ஆண்டு காவல்துறையில் புகாரளித்தார்.
அந்த வழக்கில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறி கடந்த ஆண்டு ஏப்ரல் 8 ஆம் தேதி அன்று உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் வீட்டின் முன்பு தற்கொலைக்கு முயன்றார். இதனையடுத்து இந்த வழக்கு தீவிரமாக விசாரிக்கப்பட்டது.
அந்த பெண் சமீபத்தில் காரில் பயணம் செய்தபோது ஒரு டிரக் மோதி, அவருடன் பயணித்த இரண்டு பெண்கள் உயிரிழந்தனர்; சிறுமி பலத்த காயமடைந்தார். பாதிக்கப்பட்ட பெண் உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்த ரஞ்சன் கோகோய்க்கு கடிதம் எழுதினார்.
இந்த வழக்குகளை 45 நாட்களுக்குள் விசாரிக்கவும் உத்தரவிடப்பட்டது. அதன்படி ஆக. 5 முதல் டில்லி மாவட்ட நீதிமன்றம் தினசரி அடிப்படையில் விசாரித்து வந்தது. பா.ஜ.வில் இருந்து சென்கார் நீக்கப்பட்டார். வழக்கை விசாரித்த நீதிமன்றம், ‘பாலியல் பலாத்கார வழக்கில் ‘போக்சோ எனப்படும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் சட்டத்தின் கீழ் குல்தீப் சிங் சென்கார் குற்றவாளி’ என அறிவித்தது.
இந்த வழக்கில் தீர்ப்பளித்த டிஸ் ஹசாரி நீதிமன்றம், பாஜகவில் இருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ குல்தீப் சிங் செங்காரை குற்றவாளி என அறிவித்தது. எம்எல்ஏ குல்தீப் சிங் செங்காருக்கான தண்டனை குறித்த விவரம் இன்று அறிவிக்கப்பட்டது. ல்தீப் செங்காருக்கு ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது.
Comments are closed.