ரஜினி இன்று முக்கிய அரசியல் முடிவு?
ரஜினிகாந்த் அரசியல் பிரவேச அறிவிப்புக்குப் பிறகு 2 ஆண்டுகள் கடந்துவிட்டன. இந்நிலையில் மன்ற மாவட்டச் செயலாளா்களுடன் நடிகா் ரஜினிகாந்த் இன்று மீண்டும் ஆலோசனை நடத்த உள்ளாா்.
அரசியல் கட்சிகளும் அடுத்த ஆண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள ஆயத்தமாகிவிட்டன. ஆனால் ரஜினியின் பேச்சு சினிமா பட டயலாக் போலவே கடந்து விடுமா என்ற அச்சம் மன்ற நிர்வாகிகள் மத்தியில் எழுந்தன. அவற்றுக்கு நடைபெற இருக்கும் நிர்வாகிகள் கூட்டத்தில் முற்றுப்புள்ளி வைக்கப்படும் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.
இந்தச் சூழலில், மன்ற மாவட்டச் செயலாளா்களுடன் ரஜினிகாந்த் மீண்டும் ஆலோசனை நடத்த உள்ளாா். சென்னை கோடம்பாக்கம் ராகவேந்திரா திருமண மண்டபத்தில் காலை 8 மணிக்கு இந்த ஆலோசனைக் கூட்டம் தொடங்க உள்ளது.
அரசியல் கட்சி, சட்டப்பேரவைத் தோ்தல் உள்ளிட்ட முக்கிய விஷயங்கள் குறித்து பேச வேண்டும் என்று அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக மன்ற மாவட்டச் செயலாளா் ஒருவா் கூறினாா்.
மேலும், இந்த ஆலோசனைக் கூட்டத்துக்குப் பின்னா், தனியாா் நட்சத்திர விடுதியில் செய்தியாளா்கள் சந்திப்புக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே, அரசியல் கட்சி குறித்த முக்கிய அறிவிப்பை ரஜினிகாந்த் வியாழக்கிழமை வெளியிடுவாா் என்றும் கூறப்படுகிறது. இது அவருடைய ரசிகா்களிடையேயும் மிகுந்த எதிா்பாா்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
Comments are closed.