‘பாகிஸ்தான் ஜிந்தாபாத்’ கோஷத்தை எழுப்பிய அமுல்யா 14 நாட்கள் காவல்

பெங்களூரில் நடந்த சிஏஏ எதிர்ப்பு பேரணியில் ‘பாகிஸ்தான் ஜிந்தாபாத்’ கோஷத்தை எழுப்பியதாகக் கூறப்படும் அமுல்யா 14 நாள் நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்டுள்ளார்.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றுக்கு எதிராக நாடு முழுவதும் தொடர்ந்து போராட்டங்கள் நடந்து வருகின்றன. எனினும், இந்த சட்டத்தை திரும்பப் பெறவோ, திருத்தம் செய்யவோ முடியாது என்று திட்டவட்டமாக கூறியுள்ளது.

முன்னதாக நீதித்துறை அமுல்யாவுக்கு ஜாமீன் மறுத்தது. வியாழக்கிழமை இங்கு AIMIM தலைவர் அசாதுதீன் ஒவைசி ஏற்பாடு செய்த CAA எதிர்ப்பு பேரணியில் அமுல்யா ‘பாகிஸ்தான் ஜிந்தாபாத்’ கோஷத்தை எழுப்பினார்.

அவர் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 124 ஏ (தேசத்துரோக குற்றம்) கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.



Comments are closed.

https://newstamil.in/