மக்கள் நீதி மய்யம் கமல்ஹாசன் கோவை தெற்கு தொகுதியில் போட்டி

வரும் சட்டசபை தேர்தலில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார்.

மக்கள் நீதிமய்யம் தலைமையிலான கூட்டணியில் சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சி, பாரிவேந்தரின் இந்திய ஜனநாயகக் கட்சி ஆகிய கட்சிகள் இணைந்து சட்டப்பேரவை தேர்தலை சந்திக்கின்றன.

மக்கள் நீதி மய்யம் சார்பாக ஏற்கெனவே முதல்கட்ட வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அறிவித்துள்ளார்.

கோவை தெற்கு தொகுதியில் கமல்ஹாசன் போட்டியிட உள்ளார். எடப்பாடி தொகுதியில் முதல்வர் பழனிசாமிக்கு ஆதரவாக தாசப்பராஜ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பாக சுபா சார்லஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.



Comments are closed.

https://newstamil.in/