கஜகஸ்தான் விமான விபத்து – 100 பேரின் நிலை என்ன? – வீடியோ

100 பயணிகளுடன் சென்ற விமானம் கஜகஸ்தானின் அல்மட்டி விமான நிலையத்தில் விபத்துக்குள்ளானது.

விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே அருகில் இருந்த 2 மாடி கட்டடத்தின் மீது மோதி விபத்தில் சிக்கியது. உள்ளூர் நேரப்படி வெள்ளிக்கிழமை காலை அல்மாட்டி விமான நிலையத்தில் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே பெக் ஏர் விமானம் கீழே சென்றதாக அவர்கள் கூறுகிறார்கள்.

சம்பவ இடத்திற்கு அவசர சேவை ஊழியர்கள் விரைந்துள்ளனர். தப்பிப்பிழைத்தவர்கள் யாராவது இருக்கிறார்களா என்று தெரியவில்லை.

இந்த விமானம் கஜகஸ்தானின் மிகப்பெரிய நகரமான அல்மாட்டியில் இருந்து நாட்டின் தலைநகரான நர்சுல்தானுக்கு செல்லும் வழியில் இருந்தது.

அவசர உதவி மற்றும் மீட்புப் படையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். தொடர்ந்து மீட்புப் பணிகள் நடந்து வருகிறது.Comments are closed.

https://newstamil.in/