தி.மு.க அ.தி.மு.க அல்லாத கட்சிகளோடு கூட்டணி: கமல்ஹாசன் அறிவிப்பு

மக்கள் நீதி மய்யம் மூன்றாம் ஆண்டில் அடி எடுத்து வைத்திருப்பதையொட்டி, சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன், “நேர்மையை நோக்கி யார் பயணிக்கிறார்களோ அவர்கள் நிச்சயம் இணைவார்கள் என்றார்.

அதிமுக, திமுக ஆகிய திராவிட கட்சிகள் அல்லாத கட்சிகளோடு, மக்கள் நீதி மய்யம், கூட்டணி அமைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளதாக, அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்திருக்கிறார்.

பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய கமல், மக்கள் நீதி மய்யம் தலைமையில் தான் கூட்டணி அமைய வேண்டும் என்பது இல்லை என்றும், பேச்சுவார்த்தையில் எப்படி உடன்பாடு எட்டப்படுகிறதோ அதை பொறுத்து கூட்டணி அமையும் என்றார்.

எம்ஜிஆர், சிவாஜி இருக்கும்போதே அவர்களின் இடத்தை பிடித்தவர்கள் என்பதால், அரசியலிலும் அந்த இடத்தை பிடிப்போம் என கமல்ஹாசன் தெரிவித்தார்.

மேலும், அதிமுக, திமுக அல்லாத கட்சிகளுடன் கூட்டணி அமைக்க வாய்ப்பு இருப்பதாக நம்புக்கிறேன். டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்ததற்கு நன்றி.” இவ்வாறு பேசினார்.



Comments are closed.

https://newstamil.in/