கொரோனா வைரசுக்கு உலகளவில் 2,75,944 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 91,9121 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்துள்ளனர். 11,398 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்தியாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 258 ஆனது. கொரோனாவுக்கு இந்தியாவில் 5 பேர் பலியாகி உள்ளனர்.
சீனாவை விட இத்தாலியில் அதிகம் பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். அங்கு ஒரே நாளில் நேற்று மட்டும் 627 பேர் உயிரிழந்த நிலையில் இதுவரை மொத்தம் 4,032 பேர் உயிரிழந்துள்ளனர். இத்தாலியில் மொத்தம் 47,000க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.