மர்ம நபர் டில்லி ஜாமியா பல்கலை.,யில் துப்பாக்கிச் சூடு
டில்லி ஜாமியா பல்கலை.,யில் மர்ம நபர் ஒருவர் துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தி உள்ளார். டெல்லியின் ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழகத்தில் இன்று பிற்பகல் குழப்பம் ஏற்பட்டது, ஒரு நபர் நாட்டு துப்பாக்கியால் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தினார். துப்பாக்கிச் சூடு நடத்தியதில், குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஒரு மாணவர் காயமடைந்தார்.
மாணவர்கள் ஜாமியாவிலிருந்து மகாத்மா காந்தியின் நினைவு ராஜ்காட் நோக்கி சென்று கொண்டிருந்தனர். அப்பகுதியில் கடும் போலீஸ் இருந்த போதிலும் துப்பாக்கிச் சூடு நடந்தது, பின்னர் அந்த நபர் குடியுரிமை திருத்தச் சட்ட எதிர்ப்பாளர்களால் பிடிக்கப்பட்டார்.
ஜாமியா பல்கலை.,யில் சிஏஏ.,வுக்கு எதிராக கடந்த மாதம் நடந்த போராட்டத்தின் போது கலவரம் வெடித்தது. இந்த கலவரத்தால் ஏற்பட்ட பதற்றம் இன்னும் முழுமையாக தணியவில்லை. இந்நிலையில் மீண்டும் மாணவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ள சம்பவத்தால் மீண்டும் பதற்றம் அதிகரித்துள்ளது.
Comments are closed.