Thursday, September 10, 2026
ENTERTAINMENT

தனுஷ் 3-வது பாலிவுட் படத்தின் டைட்டில் ‘அட்ராங்கி ரே’

ஆனந்த் எல் ராய் இயக்கிய ராஞ்சனா படம் மூலம் பாலிவுட் சென்றார் தனுஷ். இதையடுத்து அவர் பால்கி இயக்கத்தில் அமிதாப் பச்சன், அக்ஷரா ஹாஸனுடன் சேர்ந்து ஷமிதாப் படத்தில் நடித்தார்.

இந்நிலையில் தனுஷ் நடிக்கும் 3-வது இந்திப்படத்தை இயக்குநர் ஆனந்த் எல்.ராய் இயக்குகிறார். இவர் தனுஷின் முதல் இந்திப் படமான ராஞ்சனாவை இயக்கியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

‘Atrangi Re’ என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்தப் படத்தில் தனுஷ் உடன் நடிகர் அக்‌ஷய்குமார், சாரா அலிகான் ஆகியோர் நடிக்கின்றனர். இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். மார்ச் 1-ம் தேதி முதல் படப்பிடிப்பு தொடங்க உள்ள நிலையில் புதிய புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

Atrangi Re - Dhanush
Atrangi Re - Dhanush

Atrangi Re - Dhanush
Atrangi Re - Dhanush

Comments are closed.