ஜிஎஸ்டி வரி செலுத்தா விட்டால் சொத்துக்கள் முடக்கம்

சரக்கு மற்றும் சேவை வரியான ஜிஎஸ்டி செலுத்துவோரின் புகார்களை ஆய்வு செய்ய குறைத்தீர்ப்பு குழு அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் தொடர்ந்து பலமுறை அறிவுறுத்திய பிறகும் ஜிஎஸ்டி செலுத்த தவறினால் அவர்களின் சொத்துக்கள் மற்றும் வங்கிக் கணக்குகளை முடக்கும் வகையில் விதிகளில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது.

1 கோடிக்கு மேற்பட்ட ஜிஎஸ்டி-பதிவு செய்யப்பட்ட நிறுவனங்கள் சரியான நேரத்தில் வருமானத்தை தாக்கல் செய்யத் தவறிய நிலையில், புதிய விதிமுறைகள் ஜிஎஸ்டி-அதிகாரிகளுக்கு உங்கள் சொத்து மற்றும் வங்கிகளின் கணக்குகளை இணைக்க உதவுகின்றன.

மேலும் ஜிஎஸ்டி பதிவு பெற்ற ஏறக்குறைய 1 கோடிக்கும் அதிகமானவர்கள் உரிய நேரத்திற்கு வரி செலுத்தாமல் உள்ளனர். இவர்களிடம் கண்டிப்பை காட்டவும், முறையாக ஜிஎஸ்டி செலுத்துவோரிடம் இணக்கமாக உறவை ஏற்படுத்தும் யுக்தியாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது.

வரி பாக்கி வைத்திருப்போர் மீது மத்திய மறைமுக வரி மற்றும் சுங்கத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க இந்த சட்டம் வழிவகை செய்ய உள்ளது.

உத்தரவு பிறப்பிக்கப்பட்ட 30 நாட்களுக்குள் பதிலளிக்கத் மற்றும் பாக்கியை செலுத்தாவிட்டால் சொத்துக்கள் பறிமுதல், சொத்துக்கள் மற்றும் வங்கிக் கணக்கு முடக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.



Comments are closed.

https://newstamil.in/