ரூ.1,300 கோடி போதைப்பொருள் பறிமுதல்

ரூ.1,300 கோடி மதிப்பு போதைப்பொருளை பறிமுதல் செய்த தேசிய போதைமருந்து கடத்தல் தடுப்பு பிரிவினர், 5 இந்தியர்களை கைது செய்தனர்.

மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவான போதைப்பொருள் கட்டுப்பாட்டு பணியகம் (என்.சி.பி) ஆஸ்திரேலிய அதிகாரிகளுடன் சேர்ந்து ரூ.1300 கோடி மதிப்புள்ள போதைப்பொருள்களைப் பறிமுதல் செய்துள்ளதாக ஏஎன்ஐ நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

இதில், சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பல், இந்தியாவில் பதுக்கி வைத்திருந்த 20 கிலோ கொக்கைன் மற்றும் ஆஸ்திரேலியாவில் பதுக்கி வைத்திருந்த 200 கிலோ மெத்தம்பெடமைன் போதைப்பொருளை பறிமுதல் செய்தனர்.

மேலும் போதைப்பொருள்களைப் பதுக்கி ஈடுபட்ட 5 இந்தியர்கள், 1 அமெரிக்கர், 2 நைஜீரியர் மற்றும் 1 இந்தோனேசியர் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளனர்.Comments are closed.

https://newstamil.in/