தமிழகத்தில் ஊரடங்கு விதிகளை தளர்த்த கூடாது – மத்திய அரசு
சென்னையில் இதுவரை மொத்தம் 285 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
கொரோனா வைரஸால் தமிழகத்தில் இதுவரை 1477 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மட்டும் 285 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் நேற்று ஒரே நாளில் 50 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இந்நிலையில் கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த நாடு தழுவிய ஊரடங்கு குறித்து மத்திய அரசு வழங்கிய வழிகாட்டுதல்களை மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் விதிகளை தளர்த்த முடியாது என்று அரசாங்கம் தெளிவுபடுத்தியுள்ளதுடன், இந்த காலகட்டத்தில் மாநிலங்கள் தங்கள் சொந்த நடவடிக்கைகளை அனுமதிக்க முடியாது என்றும் கூறியுள்ளது.