DMK contest 174 constituency – திமுக 174 தொகுதிகளில் நேரடியாக போட்டி
சென்னை: தமிழகத்தில் ஏப்ரல் 6-ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் திமுக தனது கூட்டணிக் கட்சிகளுடனான தொகுதி பங்கீட்டை சுமூகமாக நடத்தியுள்ளது. அடுத்ததாக கூட்டணிக் கட்சிகளுக்கு எந்தெந்த தொகுதி என்பது குறித்து முடிவு செய்யப்பட உள்ளது.
திமுக கூட்டணியில் கட்சிகளுக்கு ஒதுக்கீடு நிறைவடைந்ததையடுத்து தி.மு.க., 174 இடங்களில் போட்டியிடுகிறது. திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள சில கட்சிகள் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிடுவதையும் சேர்த்து 187 இடங்கள் ஆகிறது.
திமுக– 174
காங்-25 இ.கம்யூ., -6,
மார்க்சிஸ்ட் -6
விடுதலை சிறுத்தைகள் -6
மதிமுக -6
கொ.ம.தே.க-3
இ.மு.லீக்-3 உள்ளிட்ட இடங்களும் இதர கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதியும் என ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
திமுக கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கான தொகுதிகளை அடையாளம் காணும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. விரைவில் விவரத்தை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பார் என்று கூறப்படுகிறது.
Comments are closed.