மாநிலங்களவை தேர்தலில் திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு
மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்களை அக்கட்சி தலைவர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார். திருச்சி சிவா, அந்தியூர் செல்வராஜ், என்.ஆர்.இளங்கோ ஆகியோர் திமுக சார்பில் போட்டியிடுகின்றனர்.
தற்போதுள்ள, எம்.எல். ஏ.,க்கள் எண்ணிக்கையின்படி, ஆளும் கட்சி சார்பில் மூன்று பேரும், எதிர்க்கட்சிகள் சார்பில், மூன்று பேரும் போட்டியின்றி, எம்.பி.,க்களாக தேர்வாகும் வாய்ப்பு உள்ளது.
தமிழகத்தில் இருந்து காலியாகும் 6 இடங்களுக்கு வருகிற 26 ம் தேதி தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. வருகிற 6 -ம்தேதி வேட்புமனு தாக்கல் துவங்க உள்ள நிலையில், திமுக சார்பில் போட்டியிடும் 3 வேட்பாளர்களின் பெயர் விவரங்களை, அக்கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலின், வெளியிட்டார்.
இதன்படி, திமுக தலைவர் ஸ்டாலின் மாநிலங்களவை தேர்தலுக்கான திமுக வேட்பாளர்களை அறிவித்துள்ளார். திருச்சி சிவா, அந்தியூர் செல்வராஜ், என்.ஆர்.இளங்கோ ஆகியோர் திமுக சார்பில் ராஜ்யசபா தேர்தலுக்கு போட்டியிடுகின்றனர்.
Comments are closed.