கொரோனா – மீண்டும் கடும் பாதிப்பில் மாநிலங்கள்!

இந்தியாவில் இந்த ஆண்டில் இதுவரை அதிகமானவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்ட நாளாக திங்கள்கிழமை அமைந்துள்ளது என்று இந்திய அரசு தெரிவிக்கிறது.

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 24,492 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. இது நேற்று 26,291 ஆகவும், நேற்று முன்தினம் 25,320 ஆகவும் இருந்தது. கடந்த சனிக்கிழமை 24,882 ஆக பாதிப்புகள் இருந்தன.

நாடு முழுவதும் நேற்று பதி வான புதிய நோயாளிகள் எண் ணிக்கையில் 78 சதவீதத்துக்கும் மேற்பட்டோர் மராட்டியம், பஞ்சாப், கர்நாடகா, குஜராத், தமிழ்நாடு ஆகிய 5 மாநிலங்களை சேர்ந்தவர்கள் என சுகாதார அமைச்சகம் கூறுகிறது.

தமிழகத்தில் கடந்த ஜனவரி மாதம் 8-ந் தேதி புதிதாக கொரோனா பாதிப்போரின் எண்ணிக்கை 800-க்கும் கீழ் குறையத் தொடங்கியது. தொடர்ந்து குறைந்து வந்த தொற்று பாதித்தோர் எண்ணிக்கை, கடந்த சில நாட்களுக்கு முன்னர் மீண்டும் அதிகரிக்க தொடங்கியது. தமிழகத்தில் சென்னை, கோவை, செங்கல்பட்டு, தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களில் தற்போது அதிகரித்து வருகிறது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் மீண்டும் அதிகரித்து வரும் சூழ்நிலையில் மாநில முதல்வர்களுடன் நாளை (புதன்கிழமை) பிரதமர் நரேந்திர மோடி காணொலி வாயிலாக அவசர ஆலோசனை நடத்த உள்ளார். இந்த ஆலோசனையின் போது கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும், குறிப்பாக தடுப்பூசிப் பணிகளை முடுக்கிவிடுவது குறித்தும் பிரதமர் ஆலோசிக்க இருப்பதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.



Comments are closed.

https://newstamil.in/