ஊரடங்கு நீட்டிப்பு – ஏப்.,30 வரை தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு

நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு நாளையுடன் முடிவடையும் நிறைவடையும் நிலையில், தமிழகத்தில் ஏப்.,30 வரை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

கொரோனா தடுப்பு பணிகளுக்காக பிரதமர் மோடி கடந்த மாதம் 24-ம் தேதி இரவு நாடு முழுவதும் ஊரடங்கு நிலையை அமல்படுத்தினார். இந்த ஊரடங்கு நாளை இரவுடன் முடிவுக்கு வருகிறது.

எனினும், கொரோனா தொற்று நிலை கருதி பஞ்சாப், ஒடிசா, மஹாராஷ்டிரா, மேற்கு வங்காளம் ஆகிய பல மாநிலங்கள் இம்மாத இறுதி வரை ஊரடங்கை நீட்டித்து உத்தரவிட்டுள்ளன. பிரதமரின் அறிவிப்பை அமல்படுத்துவோம் என்று தமிழக அரசு கூறியிருந்தது.

இதனிடையே, நாளை காலை 10 மணிக்கு, பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்ற உள்ளதாக பிரதமர் அலுவலகம் ட்வீட் செய்திருந்தது. ஊரடங்கு நீட்டிப்பு குறித்து பிரதமர் அறிவிப்பார் என்று தகவல்கள் கூறுகின்றன.

இந்த நிலையில், தமிழகத்தில் ஏப்ரல் 30 வரை ஊரடங்கை நீட்டித்து முதல்வர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது,

  • பிற மாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்களுக்கு மே மாதத்திற்கான 15 கிலோ அரிசி, ஒரு கிலோ துவரம் பருப்பு, ஒரு கிலோ சமையல் எண்ணெய் விலையின்றி வழங்கப்படும்.
  • ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படும் காரணத்தினால், தமிழகத்தில் உள்ள அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு மே மாதத்திற்கான அத்யாவசிய பொருட்கள் அனைத்தும், நியாய விலைக் கடைகளில் விலையின்றி வழங்கப்படும்.
  • கட்டடத் தொழிலாளர்கள் உட்பட பதிவு பெற்ற அனைத்து அமைப்புசாரா தொழிலாளர் குடும்பங்களுக்கும், குடும்பம் ஒன்றுக்கு இரண்டாவது முறையாக ரூ.1000 நிவாரண உதவி வழங்கப்படும்.
  • காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரையிலான காலத்தில், பேக்கரி இயங்க தடையில்லை என்பதையும், உணவகங்களுக்கு வழங்கப்பட்டுள்ள அறிவுரைகளின் படி பார்சல் விற்பனை மட்டுமே அனுமதி அளிக்கப்படும்.
  • சென்னை மாநகராட்சி பகுதியில் உள்ள மக்கள், கொரோனா நோய் தொடர்பான தங்கள் சந்தேகங்களை தீர்த்து கொள்ள டெலி மெடிசின் சொசைட்டி ஆப் இந்தியா நிறுவனத்தில் பதிவு பெற்ற சிறந்த டாக்டர்களை கொண்டு, தொலை மருத்துவ முறை மூலம் தங்கள் மருத்துவ சந்தேகங்களுக்கு தெளிவு பெற தமிழக அரசு வழிவகை செய்துள்ளது.


Comments are closed.

https://newstamil.in/