அதிமுக முன்னாள் சபாநாயகர் பி.எச் பாண்டியன் காலமானார்!

முன்னாள் சட்டமன்ற சபாநாயகர் மற்றும் அதிமுகவின் மூத்த தலைவர் பி.எஸ் பாண்டியன் இன்று உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 75.

அ.தி.மு.க.வை சேர்ந்த முன்னாள் சபாநாயகர் பி.எச்.பாண்டியன் (வயது75). இவர் நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி அருகே உள்ள கோவிந்தபேரி கிராமத்தைச்சேர்ந்தவர்.

தற்போது முதுமை காரணமாக சிகிச்சை பெற்று வந்தார். கடந்த சில தினங்களுக்கு முன்பு உடல்நலக்குறைவு காரணமாக இவரை வேலூர் சி.எம்.சி. ஆஸ்பத்திரியில் அனுமதித்திருந்தனர்.

1980 ஆம் ஆண்டு முதல் 1985 ஆம் ஆண்டு வரை தமிழக சட்டப் பேரவையின் துணை சபாநாயகராக பதவி வகித்தார்.

கடந்த எம்.ஜி.ஆர். ஆட்சியின் போது 1977, 1980, 1984 ஆகிய ஆண்டுகளில் 3 முறை எம்.எல்.ஏ.வாக சேரன்மகாதேவி தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு பணியாற்றினார்.

முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர் மறைவுக்குப் பிறகு ஜானகி அணியில் இருந்து 89 ஆம் ஆண்டு சட்டப்பேரவை உறுப்பினராக வெற்றி பெற்றார்.

1999ஆம் ஆண்டு திருநெல்வேலி மக்களவைத் தொகுதியிலிருந்து மக்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு ஓ.பன்னீர்செல்வம் அணியில் இருந்தார். தற்போது அதிமுகவில் அமைப்புச் செயலாளராக பதவியில் உள்ளார்.

பி.எச் பாண்டியனின் மகன் மனோஜ் பாண்டியன் தற்போது அதிமுகவில் இருக்கிறார்.



Comments are closed.

https://newstamil.in/