ஆ.ராசாவுக்கு ஆதரவும்! எதிர்ப்பும்! ஹிந்துவாக இருக்கும் வரை நீ தீண்டத்தகாதவன்!
திமுக எம்பியும் மூத்த தலைவருமான ஆ.ராசா பேசிய பேச்சு, இணையத்தில் விவாதங்களாக வெடித்து கிளம்பி உள்ளன. மற்றொருபுறம், ஏகப்பட்ட ஆத்திரத்தில் பாஜக தன்னுடைய கண்டனத்தை பதிவு செய்து வருகிறது. சமீபத்தில் சென்னையில் நடந்த இந்த விழாவில் பங்கேற்ற ஆ.ராசா பேசியதாவது: உச்சநீதிமன்றம் என்ன சொல்கிறது? நீ கிறிஸ்தவனாக இல்லாமல் இருந்தால், இஸ்லாமியனாக இல்லாமல் இருந்தால், பெர்சியனாக இல்லாமல் இருந்தால் நீ ஹிந்துவாக தான் இருக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் சொல்கிறது. இப்படிப்பட்ட கொடுமை வேறு எந்த நாட்டிலாவது உண்டா? ஹிந்துவாக இருக்கும் வரை நீ சூத்திரன். சூத்திரனாக இருக்கும் வரை நீ விபசாரியின் மகன். ஹிந்துவாக இருக்கும்வரை நீ பஞ்சவன், ஹிந்துவாக இருக்கும்வரை நீ தீண்டத்தகாதவன்.
எத்தனை பேர் விபசாரியின் மகனாக இருக்க விரும்புகிறீர்கள்? எத்தனை பேர் தீண்டத் தகாதவனாக இருக்க விரும்புகிறீர்கள்? என்கின்ற கேள்வியை உரக்க சொன்னால் தான் அது சனாதனத்தை முறியடிக்கின்ற அடிநாதமாக அமையும் என்பதை விடுதலையும், முரசொலியும், திமுக.,வும், திராவிடர் கழகமும் எடுக்க வேண்டிய காலம் வந்துவிட்டது. இவ்வாறு அவர் பேசியிருந்தார். அதிலும் பெரியார் பற்றி இவர் பேசும் பேச்சுக்கள் அனைவரையும் ஈர்த்துவிடும். இந்துத்துத்துவாவுக்கு எதிராக, முழு தரவுகளுடன் பொதுமேடையில் ஆ.ராசாவைக்கும் வாதம், டெல்லியையே திரும்பி பார்க்க செய்துவிடும்.
இப்படிப்பட்ட சூழலில், ஆ.ராசாவின் பேச்சு விவாதங்களை கிளப்பி விட்டு வருகிறது.. இந்துக்களின் மீது தொடர்ந்து அவதூறு பரப்பும் வகையில் வன்மத்தை கக்குவது சரியா? திராவிட மாடல் என்றால், இந்துக்களுக்கும் பொருந்தாதா? இவர் தவறாக பேசும் இந்துக்களின் வாக்குகள் திமுகவிற்கு வேண்டாம் என்று முதல்வர் ஸ்டாலின் மக்கள் மன்றத்தில் சொல்ல தயாராக இருக்கிறாரா? ஏற்கனவே, பலமுறை சர்ச்சையாக ஆ.ராசா பேசிய நிலையில், ஒருமுறைகூட முதல்வர் ஸ்டாலின், அவரை கண்டித்ததாக தெரியவில்லை.. மாநில முதல்வர் என்றும் பாராமல், அவரை மேடையில் வைத்துக் கொண்டே மிரட்டல் விடுக்கும் ராசா மீது என்ன நடவடிக்கை? இப்போது பேசியிள்ள அவதூறு குறித்து, ஸ்டாலின் விளக்கம் அளிப்பாரா? என்ற பல கேள்விகளை பாஜக முன்வைத்து வருகிறார்கள்.
மற்றொருபுறம் ஆ.ராசாவின் பேச்சுக்கு ஆதரவுகள் கூடி வருகின்றன. ராசா பேசியதில் என்ன தப்பு? இருப்பதைதானே சொல்கிறார். ஆதாரத்தோடுதான் பேசுகிறார். ஒருவேளை ராசா பேசியவது தவறு என்றால், பதில் ஆதாரங்களுடன் மறுமொழி சொல்ல வேண்டியதுதானே? அதைவிட்டுவிட்டு விளக்கம் கேட்டால் என்ன நியாயம்? இது அனைவருக்குமான அரசுதான். இந்துக்களை பிரிக்க நினைக்க வேண்டிய அவசியம் திமுகவுக்கு இல்லை. முடிந்தால் ராசாவுக்கு விளக்கம் தரட்டும் பாஜக தரப்பில்” என்று ஆதரவு கருத்துக்களை கூறிவருகிறார்கள்.
தனது பேச்சு சர்ச்சை ஆன நிலையில் ஆ.ராசா தனது சமூக வலைதளப் பக்கத்தில், ‛சூத்திரர்கள் யார்? அவர்கள் இந்துக்கள் இல்லையா? மனுஸ்மிருதி உள்ளிட்ட நூல்களில் ஏன் இழிவுபடுத்தப்பட்டு, கல்வி – வேலைவாய்ப்பு – கோவில் நுழைவு மறுக்கப்பட்டது. அரசியல் அதிகாரத்தாலும் – பரப்புரையாலும் 90 சதவீத ஹிந்து மக்களின் இவ்வுரிமைகளை மீட்ட திராவிட இயக்கம் எப்படி ஹிந்துக்களுக்கு எதிரியாகும்!’ எனப் பதிவிட்டுள்ளார்.
Comments are closed.