TNPSC வேலைவாய்ப்பு 2025: அரசு உதவி வழக்குரைஞர் (Level-II) – 61 காலியிடங்கள்
தமிழக அரசின் குற்ற வழக்கு தொடர்வு துறையில் காலியாக உள்ள 61 அரசு உதவி வழக்குரைஞர் (நிலை-II) பணிகளுக்கான நேரடி நியமன அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) வெளியிட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் டிசம்பர் 31, 2025 வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.
பணி விவரம்
- அறிவிப்பு எண்: 18/2025
- பதவி: அரசு உதவி வழக்குரைஞர் – நிலை II
- மொத்த காலியிடங்கள்: 61
கல்வித் தகுதி
- அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் சட்டப் பிரிவில் இளநிலை பட்டம் (LL.B) பெற்றிருக்க வேண்டும்.
- வழக்குரைஞர் சங்கத்தில் உறுப்பினர் பதிவு கட்டாயம்.
- குற்றவியல் நீதிமன்றங்களில் குறைந்தது 5 ஆண்டுகள் வழக்கு நடத்திய அனுபவம் இருக்க வேண்டும்.
- 10ஆம் வகுப்பு அல்லது அதற்கு இணையான தேர்வில் தமிழ் ஒரு மொழிப் பாடமாக படித்திருக்க வேண்டும்.
- தேர்வு செய்யப்பட்டவர்கள் பணி நியமன நேரத்தில் உடல் தகுதிச் சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டும்.
வயது வரம்பு
- 1.7.2025 அன்றைய நிலவரப்படி குறைந்தபட்ச வயது 26.
- வயது சலுகை விவரங்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் வழங்கப்பட்டுள்ளது.
தேர்வு முறை
- முதல்நிலைத் தேர்வு
- முதன்மைத் தேர்வு
- நேர்முகத் தேர்வு
- முதல்நிலைத் தேர்வு 15.02.2026 அன்று நடைபெறும். மற்ற தேர்வு தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும்.
கட்டண விவரம்
- ஒருமுறை பதிவுக் கட்டணம்: ₹150
- முதல்நிலைத் தேர்வு கட்டணம்: ₹100
- முதன்மைத் தேர்வு கட்டணம்: ₹200
- அனைத்து கட்டணங்களும் ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும். கட்டண விலக்கு விவரங்கள் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை
விண்ணப்பத்தை TNPSC இணையதளமான https://tnpsc.gov.in இல் ஆன்லைனில் சமர்ப்பிக்கலாம்.
- ஆன்லைன் விண்ணப்பிக்க கடைசி நாள்: 31.12.2025
- மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
