IT Jobs – டிசிஎஸ் கஸ்டமர் சர்வீஸ் ஸ்பெஷலிஸ்ட் பணியாளர் தேர்வு – சென்னையில் நேரடி இண்டர்வியூ டிசம்பர் 6

சென்னையில் செயல்பட்டு வரும் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS) ஐடி நிறுவனத்தில் Customer Service Specialist பணிக்கான நேர்முகத் தேர்வு நடைபெற உள்ளது. டிசம்பர் 6ம் தேதி (நாளை மறுநாள்) காலை 10 மணி முதல் 12 மணி வரை நடைபெறவுள்ள இந்த இண்டர்வியூவில், தேவையான தகுதிகள் உள்ளவர்கள் நேரடியாக பங்கேற்கலாம். தேர்வாகும் நபர்கள் சென்னை மற்றும் இந்தூர் ஆகிய இரண்டு இடங்களில் பணியமர்த்தப்படுவார்கள்.

டாடா குழுமத்தின் முன்னணி ஐடி நிறுவனமான டிசிஎஸ், தற்போது Technical Support Representative – Voice பிரிவிற்கு பணியாளர்களை தேர்வு செய்கிறது.

தேவையான தகுதிகள்

  • ஆங்கிலத்தில் தெளிவாக பேசும் மற்றும் எழுதும் திறன்
  • துல்லியமாக டைப்பிங் மற்றும் ‘Chat Process’ அனுபவம்
  • Night shift மற்றும் Weekend shift-இல் பணியாற்ற தயாராக இருக்க வேண்டும்
  • Core Tech Support Project அனுபவம்
  • Infrastructure, Storage, Service Desk துறையில் குறைந்தது 6 மாத அனுபவம்
  • Product Troubleshooting & Tickets Resolving அனுபவம்
  • Ticketing tools மற்றும் ITIL பற்றிய அடிப்படை அறிவு
  • AWS, Azure, Google Cloud போன்ற கிளவுட் தளங்களில் அனுபவம்
  • Google / Microsoft Products தொடர்பான அனுபவம்
  • குறைந்தபட்சம் 1 முதல் 6 ஆண்டு வரை தொடர்புடைய பணியாளர் அனுபவம்

சம்பள விவரம் அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை; இறுதி இண்டர்வியூவில் மட்டுமே தெரிவிக்கப்படும். திறமை மற்றும் அனுபவத்தைப் பொறுத்து ஊதியம் நிர்ணயிக்கப்படும்.

இண்டர்வியூ இடம்

Tata Consultancy Services Ltd
415/21-24, குமரன் நகர், சோழிங்கநல்லூர்,
Old Mahabalipuram Road,
Chennai – 600119.



https://newstamil.in/