கொரோனவால் தள்ளிப்போகும் ‘விஜய் 65’ – ஏப்ரல் இறுதியில் வேலைகள் ஆரம்பம்?
தளபதி விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்து முடித்து வெளிவர காத்துள்ள படம் மாஸ்டர். இந்தப் படத்திற்கான இசை வெளியீட்டு விழா, சமீபத்தில் நடைபெற்றது.
இந்நிலையில் விஜயின் ‘தளபதி65‘ குறித்து ஒரு தகவல் கசிந்தது. ஏற்கெனவே வெற்றிமாறன், சுதா கொங்கரா, பேரரசு உள்ளிட்ட சில இயக்குநர்கள் பெயர்கள் அடிப்பட்டன. இதில் யாராவது ஒருவர் ‘தளபதி65’ படத்தை இயக்கலாம் என்றும் கூறப்பட்டிருந்த நிலையில் இப்போது இந்தப் பட்டியலை எல்லாம் பின்னுக்கு தள்ளிவிட்டு விஜய்யின் அடுத்த படத்தை முன்னணி இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸ் தான் இயக்க போகிறார் என்று சில தகவல்கள் கிசுகிசுக்கப்பட்டு வருகிறது.
சுதா கொங்கரா, நடிகர் விஜய்க்கு சொன்ன கதைக்கான முன்தயாரிப்பு பணிகளுக்கு அதிககாலம் தேவைப்படுவதால் அந்தத் திட்டத்தை தள்ளி வைத்துவிட்டு ஏ.ஆர்.முருகதாஸை விஜய் தேர்வு செய்துள்ளதாகக் தகவல் கசிந்தது.
இப்படத்தில் தளபதி விஜய்யின் கதாபாத்திரம் ஒரு ஆர்மி மேன் என்று சில தகவல்கள் கசிந்துள்ளது. ஆனால் இவர்களின் கூட்டணி குறித்து அதிகாரப்பூர்வ தகவல் வரும் வரை நான் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
‘துப்பாக்கி2‘ படத்திற்கான வேலைகள் ஏப்ரல் மாதம் இறுதியில் தொடங்கவுள்ளதாக தெரிய வந்துள்ளது. ஆனால் கொரோனா குறித்த அச்சம் நீடித்தால் இந்தத் திட்டத்தின் மாற்றம் இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. ஆனால் இது குறித்து படக்குழுவோ விஜய் தரப்போ எந்தச் செய்தியையும் அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Comments are closed.