என் முதல் நண்பன் சிம்பு – விஷ்ணு விஷால் வைரல் ட்வீட்

நடிகர் விஷ்ணு விஷால் தனது நடிப்பு வாழ்க்கையை 2009 ஆம் ஆண்டில் இயக்குனர் சுசீந்திரனின் படமான ‘வெண்ணிலா கபடி குழு’ மூலம் தொடங்கினார், இது இயக்குனரின் முதல் படமாகும்.

திரைத்துறையில் புதிய நடிகர்களை ஊக்குவிக்க ஒரு சில நட்சத்திரங்கள் மட்டுமே அறியப்படுகின்றன என்பது தெரியும். அத்தகைய நடிகர்களில் சிம்புவும் ஒரு , அவர் இளம் வயதிலிருந்தே இளம் திறமைகளை ஊக்குவித்து வருகிறார்.

விஷ்ணு விஷால் தனது முதல் படத்திற்குப் பிறகு தமிழ் திரையுலகில் தனது முதல் நண்பர் சிம்புவைத் தவிர வேறு யாருமல்ல என்பதை வெளிப்படுத்தியுள்ளார்.

ராட்சசன் படத்தின் ஷூட்டிங்கிற்கு நடிகர் சிம்பு வந்திருந்து விஷ்ணு விஷாலை சந்தித்தப் போது இருவரும் எடுத்துக் கொண்ட க்யூட் செல்ஃபியையும் நடிகர் விஷ்ணு விஷால் தற்போது வெளியிட்டு, சிம்பு குறித்து பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படத்தை பார்த்த சிம்பு ரசிகர்கள் எக்கச்சக்க லைக்குகளையும் கமெண்ட்டுகளையும் தெறிக்க விட்டு வருகின்றனர்.

மேலும், அந்த செல்ஃபி புகைபடத்திதிற்கு கேப்ஷனாக, சினிமாவில் நுழைந்து முதல் படம் முடித்த தனக்கு கிடைத்த முதல் சினிமா நண்பன் சிம்பு தான் என்றும், சினிமா குறித்த பல விஷயங்களை தனக்கு சிம்பு போதித்ததாகவும், இன்று வரையிலும், தங்களுக்கு இடையே நல்ல நட்பு நீடிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.



Comments are closed.

https://newstamil.in/