காமெடி கதையில் தந்தையுடன் இணைந்து நடிக்கும் சாந்தனு!
நடிகர் பாக்யராஜ், சாந்தனு இணைந்து நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
‘திரைக்கதை மன்னன்’ பாக்யராஜ் மற்றும் அவருடைய மகன் சாந்தனு இருவரும் இணைந்து நடிக்கவுள்ளனர். மாஸ்டர் திரைப்படத்தில் நடித்து முடித்திருக்கும் நடிகர் சாந்தனு அடுத்ததாக தனது தந்தையுடன் இணைந்து நடிக்கிறார்.

இன்னும் பெயரிடப்படாத இத்திரைப்படத்தில் சாந்தனுவுக்கு ஜோடியாக நடிகை அதுல்யா நடிக்கிறார். இவர்களுடன் நடிகர் யோகி பாபு, மனோபாலா, ஆனந்த்ராஜ், மயில்சாமி, மொட்ட ராஜேந்திரன், பிராங்க் ராகுல், ராஜு,ரேஷ்மா, மதுமிதா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்

லிப்ரா ப்ரொடக்ஷன்ஸ் மற்றும் பர்ஸ்ட் மேன் பிலிம் ஒர்க்ஸ் தயாரிப்பில் புதுமுக இயக்குனர் ஸ்ரீஜர் இயக்கத்தில் உருவாக உள்ளது.
பல்வேறு கலாட்டா கல்யாண திரைப்படங்களைப் பார்த்திருந்த நமக்கு, ஒரு ரொமாண்டிக் காமெடி திரைப்படமாக உருவாகவிருக்கும் இந்தப் படம், புதுமணத் தம்பதிகளின் முதல் இரவில் நடைபெறும் முக்கிய பாரம்பரிய நிகழ்வுகளையும், சாங்கித்யங்களையும் நகைச்சுவை மாறாமல், சற்றும் விரசம் இல்லாமல் சுவராஸ்யமாக காட்சிப்படுத்த இருக்கிறார்களாம். இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் நேற்று துவங்கியது.
Comments are closed.