‘மேன் வெர்சஸ் வைல்டு’ நிகழ்ச்சியில் ரஜினிகாந்த்
மேன் வர்சஸ் வைல்ட் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடியைத் தொடர்ந்து ரஜினிகாந்த் பங்கேற்கிறார். பியர் கிரில்ஸ் என அனைவராலும் அறியப்படும் எட்வர்ட் மைக்கேல் கிரில்ஸ், பிரிட்டனின் முன்னாள் ராணுவ வீரர். இவர் தற்போது வனப்பகுதியில் பிரபலங்களுடன் சுற்றி வரும் ‘மேன் வெர்சஸ் வைல்ட்’ என்ற ரியாலிட்டி ஷோ நடத்தி வருகிறார்.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்தமான இந்த நிகழ்ச்சியை பியர் கிரில்ஸ் என்பவர் தொகுத்து வழங்குகிறார். யாரும் இல்லாத காடு, மலை, வனப்பகுதியில் பியர் கிரில்ஸ் இறக்கி விடப்படுவார்.
நடிகர் பென் ஸ்டில்லர், அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா போன்றோரை வனப்பகுதிக்கு அழைத்து சென்று பேட்டியெடுத்துள்ளார். சமீபத்தில், உத்தரகாண்டில் உள்ள ஜிம் கோர்பெட் தேசிய பூங்காவில் உள்ள வனப்பகுதிக்குள் பிரதமர் நரேந்திர மோடியை அழைத்து சென்றார். இந்த நிகழ்ச்சி பலராலும் பாராட்டப்பட்டது.
இந்நிலையில், நிகழ்ச்சியின் அடுத்த சீசனை நேஷனல் ஜியோக்ரபி சேனல் , ‘ரன்னிங் வைல்ட் வித் பியர் கிரில்ஸ்’ என்ற பெயரில் ஒளிப்பரப்ப இருப்பதாக அறிவித்தது. இதில், ஹாலிவுட் பிரபலங்கள் பலர் கலந்து கொள்ளப்போவதாக நேற்று (ஜன.,27) ஒரு அறிவிப்பை வெளியிட்டது.
இந்நிலையில் மோடியைத் தொடர்ந்து, மேன் வெர்சஸ் வைல்டு நிகழ்ச்சியில் ரஜினி பங்கேற்கவுள்ளார். கர்நாடகத்திலுள்ள பந்திப்பூர் புலிகள் சரணாலயத்தில் இன்றும் வியாழன் அன்றும் இந்நிகழ்ச்சிக்கான படப்பிடிப்பு நடைபெறவுள்ளது. காட்டுப்பகுதியில் ஒருநாளைக்கு ஆறு மணி நேரம் மட்டுமே படப்பிடிப்பு நடைபெறவேண்டும் என்றும் கட்டளையிடப்பட்டுள்ளது.
Comments are closed.