சைக்கோ விமர்சனம்
மிஸ்கின் முற்றிலும் வித்தியாசமான கதையை கையில், படத்தை பார்த்து விட்டு வெளியே வரும் போது நமக்கே ஒரு பயம் வருவது தான் படத்தின் வெற்றி. அதை சரியாக செய்துள்ளார் மிஸ்கின்.
LATEST FEATURES:
சைக்கோ விமர்சனம்
Overall
- Critic's Rating
- Avg. Users' Rating
User Review
( vote)விமர்சனம்
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனரான மிஸ்கின் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், அதிதி ராவ், நித்யா மேனன் மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் சைக்கோ.
இன்று முதல் உலகம் முழுவதும் ரிலீஸாகியுள்ள இந்த படத்தை பார்த்த ரசிகர்கள் சமூக வளையதளங்களில் விமர்சனங்களை பதிவு செய்து வருகின்றனர்.
தமிழ் சினிமாவில் எப்போதும் வித்தியாசமான கதைக்களத்தை தேர்ந்தெடுத்து தரமான படங்களை கொடுத்து வருபவர் மிஷ்கின். அதுவும், கிரைம், த்ரில்லர் வகை படங்கள் என்றால் சீட்டின் நுனிக்கே மிஷ்கின் நம்மை கொண்டு வந்துவிடுவார்,
சைக்கோ படத்தில் தொடர்ச்சியாக இளம் பெண்கள் கடத்தப்பட்டு அடுத்த நாள் தலையில்லாமல் பொதுவெளியில் கொலை செய்யப்பட்டு வைக்கப்படுகின்றனர். இந்த வழக்கை சில வருடங்களாக ராம் (இயக்குனர்) விசாரித்து வருகின்றார். ஆனால் ஒரு க்ளூ கூட கிடைக்கவில்லை,
படத்தில் கண் பார்வையற்ற மாற்று திறனாளியாக நடித்துள்ள உதயநிதி அதிதி ராவை காதலிக்கிறார். தன்னுடைய காதலை நிரூபிக்கும் தருணத்தில் அதிதி ராவ் சைக்கோவால் கடத்தப்படுகிறார்.
அதன் பின்னர் என்ன நடக்கிறது? பார்வையற்ற உதயநிதி காதலியை எப்படி மீட்கிறார் என்பதே இப்படத்தின் திகில் கலந்த கதைக்களம்.
மிஷ்கின் படம் என்றாலே நடிகர் நடிகைகள் அனைவர் உருவிலும் மிக்ஷினே தான் தெரிவார், அந்த வகையில் கண் தெரியாதவராக உதயநிதி மிகவும் மெனெக்கெட்டுள்ளார், உதயநிதி கவுதம் என்ற கதாபாத்திரத்தில் பார்வையற்றவராக நடித்து நம்மை சிலிர்க்க வைக்கிறார். லவ், எமோஷன் என அனைத்திலும் அசத்தியுள்ளார். அப்படியே கண் தெரியாதவர்கள் வாழ்க்கையை பிரதிப்பலித்துள்ளார், அவருக்கு பக்க பலமாக சிங்கம்புலியும் கொஞ்சம் காமெடி, கொஞ்சம் எமோஷ்னல் என ஸ்கோர் செய்துள்ளார்.
சிங்கம் புலி, இயக்குனர் ராம் ஆகியோர் அவர்களின் கதாபாத்திரங்களை கச்சிதமாக செய்துள்ளனர். சைக்கோவாக மிரட்டியுள்ளார் ராஜ்குமார். அவருடைய பார்வையே நம்மை பயமுறுத்தும் வகையில் அமைந்திருப்பது படத்தின் மிகப்பெரிய ப்ளஸ்.
நித்யா மேனன், உதயநிதி இருவரும் தங்களுக்கு ஒரு குறை இருந்தும், அதை குறையாக பார்க்காமல் இயல்பாக கடந்து செல்ல நினைப்பது, அதிலும் துவண்டு இருக்கும் நித்யாவை கண்ணத்தில் அறைந்து அவரை மீட்டுக்கொண்டு வரும் உதயநிதி, போன்ற காட்சிகள் ரசிக்க வைக்கின்றது.
படத்தில் இன்னொரு ஹீரோக்கள் என்றால் தன்வீர் ஒளிப்பதிவும், இளையராஜாவின் இசையும் தான், உதயநிதி கார் ஓட்ட, நித்யா மேனன் வழி சொல்வது போல் வரும் காட்சி அபாரம். படத்தில் சில லாஜிக் மீறல்கள் இருந்தாலும் கதை போகும் விதத்தில் அது மறந்து போகிறது.
மொத்தத்தில் நல்ல சினிமாவை தருவதில் மிஸ்கின் ஒரு சைக்கோ