இயக்குனர் அட்லீ – பிரியாவுக்கு குழந்தை பிறந்ததுள்ளது
தமிழ் திரையுலகில் பிரம்மாண்ட இயக்குனராக வலம் வருபவர் ஷங்கர். அவரிடம் எந்திரன், நண்பன் போன்ற படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றியவர் அட்லீ. இவர் கடந்த 2013-ம் ஆண்டு வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் ஆன ராஜா ராணி படம் மூலம் கோலிவுட்டில் இயக்குனராக காலடி எடுத்து வைத்தார். இதையடுத்து மெர்சல், பிகில், தெறி என விஜய்யை வைத்து ஹாட்ரிக் ஹிட் கொடுத்து நட்சத்திர இயக்குனர்கள் பட்டியலில் இணைந்தார் அட்லீ.

இயக்குனர் அட்லீ மற்றும் பிரியா ஆகிய இருவரும் கடந்த 2014 நவம்பர் 9 அன்று சென்னையில் பிரமாண்ட விழாவில் திருமணம் செய்து கொண்டனர். சமீபத்தில், தனது மனைவி கர்ப்பமாக இருப்பதாக சில புகைப்படங்களை வெளியிட்டு அறிவித்துள்ளார். சில வாரங்களுக்கு முன்பு தம்பதியினர் விரைவில் பெற்றோராகப் போவதாக அறிவித்தது மட்டுமின்றி, குடும்பங்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில், வளைகாப்பு விழாவை நடத்தினர். இந்த ஆண்டு பிப்ரவரியில் குழந்தை பிறக்கும் என்றும் அட்லீ தெரிவித்திருந்தார்.
ஆனால், பிப்ரவரி பிறக்கும் ஒரு நாள் முன்னரே பிரியாவுக்கு குழந்தை இன்று பிறந்துவிட்டது. தனக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது என்று தெரிவித்ததோடு, மகன் பிறந்துள்ள மகிழ்ச்சியில் டுவிட்டரில் புகைப்படம் ஒன்றை பதிவிட்டு, குழந்தை பிறப்பதை விட சிறந்த ஃபீலிங் உலகில் எதுவும் இல்லை என சரியாக தான் சொல்லியிருக்கிறார்கள். அது போலவே, எங்கள் ஆண் குழந்தை இங்கே உள்ளது. பெற்றோரின் புதிய அற்புதமான சாகசம் இன்று தொடங்குகிறது என்று குறிப்பிட்டு இருக்கிறார்.
Comments are closed.