விஜய்க்கு தூதுவிடும் காங்கிரஸ்! – இணைவாரா விஜய்?

நடிகர் விஜய் காங்கிரஸ் கட்சிக்கு வந்தால் மனதார வரவேற்போம் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துவரும் `மாஸ்டர்’ படத்தின் படப்பிடிப்பு, இறுதிக்கட்டத்தில் இருக்கிறது. விஜய்யை பற்றி தினமும் ஒரு செய்தி வந்து கொண்டுதான் இருக்கிறது

இந்நிலையில் காங்கிரஸ் கட்சி விஜய்க்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வரும் நிலையில், செய்தியாளர்களிடம் பேசியுள்ள தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி ”நடிகர் விஜய் காங்கிரஸில் இணைந்தால் ஏற்றுக்கொள்வோம். நாங்கள் நடிகர் ரஜினிக்கு எதிராகவும் பேசவில்லை. விஜய்க்கு ஆதரவாகவும் பேசவில்லை’ என்று கூறியுள்ளார்.



Comments are closed.

https://newstamil.in/