ஆஜித் பிக் பாஸில் இருந்து வெளியேற்றப்பட்டார்?

பிக்பாஸ் -4 சீசனில் போன வாரம் நடிகை ரேகா வெளியேற்றப்பட்டார். இந்த வாரம் ஆஜித் வெளியேற்றப்பட்டுள்ளதாக தகவல். தற்போது தொடங்கியுள்ள விஜய் டிவியின் பிக் பாஸ் ஷோவில் கலந்துக் கொண்டுள்ள ஆஜித் காலிக் குறித்த தேடல் இணையத்தில் அதிகமாகியுள்ளது.

பிக் பாஸ் 4ல் போட்டியாளராக கலந்து கொண்டு கம்பேக் கொடுத்திருப்பது அவரது ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கடந்த 18 நாட்களாக நடைபெற்று வரும் பிக்பாஸ் போட்டியில் போன வார எவிக்‌ஷனில் ரேகா வெளியேற்றப்பட்டார். இந்த வார எவிக்‌ஷனுக்கான நாமினேஷன் பட்டியலில் பாலாஜி, ஆஜித், அனிதா, சுரேஷ், ஆரியின் பெயர்கள் இருந்தன.

ஆஜித் மைண்டில் என்ன கேம் ட்ராக் இருக்கிறது என்பது இன்னும் யாருக்கும் விளங்கவில்லை.

இந்நிலையில் நாளை ஞாயிற்றுக்கிழமை எவிக்‌ஷனை கமல்ஹாசன் அறிவிக்கும் ஷூட்டிங் இன்று நடந்துள்ளது. அதில், ஆஜித் வெளியேற்றப்பட்டதாக தகவல்.



Comments are closed.

https://newstamil.in/