தலைமை செயலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்
சென்னை: தமிழகத்திலும் பல்வேறு அரசியல் கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில் சென்னை தலைமை செயலகத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக தொலைபேசி மூலம் மிரட்டல் விடுக்கப்பட்டது.
அதில், முதல்வர் இ.பி.எஸ்., துணை முதல்வர் ஓ.பி.எஸ்., வீட்டிற்கும், தலைமை செயலகத்திற்கும் வெடிகுண்டு அனுப்ப போவதாக தொலைபேசி மூலம் மிரட்டல் விடுக்கப்பட்டது.
இதனையடுத்து, அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டது. இந்நிலையில், தலைமை செயலகத்தில், வெடிகுண்டு தடுப்பு நிபுணர்கள் மற்றும் மோப்பநாய் உதவியுடன் சோதனை நடந்தது.
Comments are closed.